சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நீர்வெட்டு அமுல்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை ஆகிய மாநகர பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலும் இரத்மலானை பகுதியிலும் நாளைய தினம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.