தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது.
இவர் சமீபத்தில் நடிகை கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தை அவர் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். ஒருவேளை ஓடிடியில் வெளியானால் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய சூழலில், தனது சம்பளத்தை 3.5 கோடியிலிருந்து ஒரேயடியாக 10 கோடியாக ராஷ்மிகா மாற்றி விட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய ராஷ்மிக்கா, “நடிகை ராஷ்மிகா மந்தனா, நான் 2 கோடி சம்பளம் கேட்டால் தயாரிப்பாளர்களே கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன் நடிகர்களுக்கு கூட அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை. எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதற்கு காரணமே இந்த சம்பளம் குறித்த கிசுகிசுக்கள் தான். நான் கிசுகிசுக்களுக்கு ஒருபோதும் பதில் அளிப்பதில்லை” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் திரில்லரை அடிப்படையாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதில் முன்னணி நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.