மீண்டும் சர்ச்சையை கிளப்பி பதிவிட்ட ஆண்ட்ரியா.!?

பாடகியாக இருந்த ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

திறமையும் அழகும் கொண்ட ஆண்ட்ரியா தொடர்ந்து ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வர துவங்கினார். இவரது நடிப்பில் வெளியான வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் அனைவராலும் திறமையான நடிகையாக ஆண்ட்ரியா அடையாளம் காணப்பட்டார்.

இதற்கு நடுவே ஆண்ரியா மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா தன்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி எடுத்து வருகின்றார். சமீபத்தில் இவரது மாஸ்டர் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

ஆண்ட்ரியா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. அத்துடன் அவருடைய குணம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்தனக்கென்று ஒரு பாணியை எப்பொழுதும் அவர் கையாள்வது வழக்கம்.

நடிகை ஆண்ரியா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்திற்கு தலைப்பாக கத்தரிக்காயை வைத்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஓவர் ரொமான்டிக்காக கிஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் பலரும் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.