விஜயின் 65வது திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக இரண்டு பேர் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தன்னுடைய 65வது திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார்.
படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியானது. தொடர்ந்து படம் குறித்த எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிட வில்லை, இத்தகைய சூழலில், இந்த படத்தில் கதாநாயகி யார் என்று தகவல் அவ்வப்போது பேசப்பட்டு வந்தது.
தற்போது இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளும், இரண்டு வில்லன்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் பூஜா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், நவாசுதீன் சித்திகி மற்றும் வித்யுத் ஜாம்வால் இரண்டு வில்லன்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.