குடியகல்வு மற்றும் குடிவரவு சட்டங்களை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த நான்கு பிரெஞ்சு பிரஜைகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மிரிஸ்ஸ கடற்பரப்பில் அவர்கள் பயணம் செய்த படகு மீட்கப்பட்டது.
கப்பல் கப்டன், ஒரு தம்பதி, மற்றொரு ஆண் என நால்வர் படகில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் நால்வரும் 67- 80 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பேரும் ஏழு நாட்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து புறப்பட்டதாகவும் படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதை தொடர்ந்து, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை நோக்கி கப்டன் கப்பலை செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மிரிஸ்ஸ கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல்படையினர் கூறியுள்ளனர்.