விஜய்க்கு செய்ததை., விஜய் மகனுக்கும் செய்ய ஆசை..! எஸ்.ஏ.சந்திரசேகர்…

தளபதி விஜயின் மகன் சஞ்சயையும், தானே சினிமாவில் அறிமுகப்படுத்தி வைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக முடிவெடுத்துள்ளாராம்.

விஜயின் மகன் சஞ்சய் திரைத்துறையில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகப்படுத்த வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இத்தகைய சூழலில், விஜய்யின் இத்தகைய வெற்றிக்கு காரணமாக இருந்த விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவரை அடையாளப் படுத்தியது போல சஞ்ஜயையும் சினிமாவில் அறிமுகப் படுத்தி உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம்.

எனவே, தான் இயக்கிய ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக உப்பனா தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.