யானையின் மீது எனக்கு அன்பு அதிகம்..

மாடல் பெண்மணி யானையின் மீது நிர்வாணமாக படுத்திருந்தவாறு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஷிய நாட்டினை சார்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் எவ்ஜெனி கபிலினிகோவா (Yevgeny Kafelnikov). இவரது மகள் அலிசியா கபிலினிகோவா (Alesya Kafelnikova). அலிசியா மாடல் அழகியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் சுற்றுலா செல்ல முடிவு செய்து இந்தோனேஷியாவிற்கு வந்துள்ளார்.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாளி தீவு பகுதியில், சுமத்ரா யானை மீது அமர்ந்து புகைப்படம் எடுக்க திட்டமிட்ட நிலையில், யானை மீதான அழகியல் உணர்வு காரணமாக யானையின் மீது நிர்வாணமாக அமர்ந்தவாறு புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

அவரின் திட்டப்படி யானையின் மீது நிர்வாணமாக படுத்திருந்தவாறு புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரின் புகைப்படத்தை பார்த்த இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ” யானையின் அழகியல் உணர்வு காரணமாக அவ்வாறு புகைப்படம் எடுத்தேன். இதில் என்ன தவறு.


நான் யானைகளை எனது உயிருக்கும் மேலாக கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட விடியோக்கள் எப்படி இணையத்தில் பதிவானது என்று எனக்கு தெரியவில்லை. யானைகளின் மீது நான் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகவே, இயற்கையோடு இயற்கையாக புகைப்படம் எடுத்தேன். உள்ளூர் மக்களின் மனது புண்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும். நான் செய்ததில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை ” என்று விளக்கம் அளித்துளளார்.

 

View this post on Instagram

 

A post shared by Alesya Kaf (@kafelnikova_a)