பெட்ரோல் விலை உயர்வைக் கிண்டல் அடித்த சிவகார்த்திகேயன்… !!

பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி வரும் நிலையில் அது மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வை கண்டித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் விலை ஏறியபோது அதைக் கண்டித்து பலரும் டிவீட் செய்து விமர்சனங்களை வைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படி 2012 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஒரு டிவீட்டை பதிவு செய்துள்ளார். அதை ஒரு நகைச்சுவை துணுக்கு போல பதிவு செய்துள்ளார்.

பெட்ரோல் கடை பையன்: எவ்ளோவுக்கு சார் பெட்ரோல் போடனும்?
திருவாளர் பொதுஜனம் : ஒரு 2 ரூபாய்க்கோ 4 ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சு விடு… வண்டிய கொளுத்தி போய்ட்டே இருக்கேன்’
எனக் கேலி செய்யும் விதமாக பதிவு செய்துள்ளார். ஆனால் இப்போது அவர் இந்த விலை உயர்வுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது