பிக்பாஸ் 4வது சீசன் கொரோனா காரணமாக அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. பின் 100 நாட்கள் கடந்து நிகழ்ச்சி ஜனவரி 17ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி ஜெயித்தார். இப்போது தானே 4வது சீசன் முடிவடைந்தது அதனால் 5வது சீசன் லேட்டாக ஆரம்பமாகும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அப்படி நினைக்கும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். அதாவது பிக்பாஸ் 5வது சீசன் வரும் ஜுன் மாதமே தொடங்கவுள்ளதாம். அதற்கான வேலைகளை தயாரிப்பு குழு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்பது தேர்தல் முடிந்த பிறகே தெரியும் என்கின்றனர்.