சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது
வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.