சசிகலாவைப் புகழ்ந்த பாரதிராஜா!

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா இன்று சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். அவரது வரவால் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் சிலரே அவருக்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டினர்.

இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை பலரும் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான், பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோர் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். பின்னர் பேசிய பாரதிராஜா ‘ஒரு சாதனை தமிழச்சியைப் பார்க்கனும்னு ஆசைப்பட்டேன், சாதனை லேடி, வீரத்தமிழச்சியான சசிகலா அவர்களை சந்தித்து பேச நினைத்தேன். வந்தேன்.

தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பத்தான் அவர் வந்துள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.