வினோத் இயக்கும் வலிமை படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு படக்குழுவும் விரைவில் செய்திவரும் என்றனர்.
அஜித்தும் அப்டேட் கேட்டு சில விஷயங்களில் ஈடுபடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தார். எனவே அதில் இருந்து தல ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காக்கின்றனர்.
ஆனால் திடீரென ஒரு நாள் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வலிமை பட அப்டேட் வரும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த நேரத்தில் தான் படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் வந்துள்ளது. படப்பிடிப்பை முடித்த வினோத் படத்தின் எடிட்டிங் வேலையை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.