இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 16 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.56 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.10 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 120 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,825 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,179 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 10,750,680 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,55,986 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 97.17% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.42% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.41% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் இதுவரை 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது