கௌதம் மேனன் சிம்பு பட டைட்டில் எந்த படத்திலிருந்து வந்திருக்கிறது தெரியுமா?

நடிகர் சிம்புவின் படங்கள் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். அண்மையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படம் சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறலாம்.

அடுத்தடுத்தாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் இயக்குனர் கௌதம் மேனனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2010 ல் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வந்த விண்ணை தாண்டி வருவாயா படம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று. இப்படத்தில் காட்சிகளை கௌதம் மேனன் மிக அழகாக அமைத்திருந்தார்.

ஊரடங்கு காலத்தில் கடந்த மே மாதத்தில் இப்படத்தின் தொடர்ச்சி போல 12 நிமிட குறும்படமாக வெளியிட்டார். இதில் சிம்பு மற்றும் திரிஷா தொலைபேசி வழியாக உறையாடுவது போலிருந்தது.

சிம்பு கௌதம் மேனன் ஏற்கனவே அச்சம் என்பது மடமையடா படத்திலும் இணைந்திருந்த இந்த கூட்டணி மூன்றாம் முறையாக அடுத்தும் இணையவுள்ளதாம்.

ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைத்துள்ளார்களாம். ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் தாமரை இப்படத்தில் பணியாற்றவுள்ளாராம்.

கடந்த 2003 ல் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சூர்யாவுக்கு முக்கியமான படமான அமைந்தது.

இப்படத்தில் ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியிருந்தார். இதில் ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலில் நதிகளிலே நீராடும் சூரியன் என இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் வரியிலிருந்து படதலைப்பை தமிழில் அழகாக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.