விஜய் அப்பாவின் திடீர் முடிவு! அடுத்த அதிரடி!

நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடித்து வரும் படத்தை இயக்கிவருகிறார். விஜய் மக்கள் மன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கடந்த சில தினங்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த தகவல் வெளியாக நடிகர் விஜய் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் படத்தையோ, பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் விட்டார்.

மகனின் எதிர்ப்பு, விஜய்க்கான ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றால் அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த கட்சி பதிவுக்கான விண்ணப்பத்தை வாபஸ் பெற்றார்.

இதற்கிடையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மாற்றினார். புதியவர்களை நியமித்தார்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளாராம்.

Secure Our City என்ற இந்த அமைப்பு தமிழக மக்களின் பாதுப்பிற்கான அமைப்பு என்றும், தன்னுடைய புதிய முயற்சியின் முதல் படி இது தான் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.