அஞ்சலி செய்யும் துணிச்சலான காரியம்.! அதுல தான் ஆர்வமாம்.!

கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தான் ‘கற்றது தமிழ்’ மிகவும் வித்தியாசமான கோணத்தில் அமைந்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகை அஞ்சலி இதில் இவருடைய நடிப்பு திறமையை வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து அஞ்சலி நடித்த அங்காடி தெரு திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.இதனால், அஞ்சலிக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது ,தொடர்ந்து ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும்,தரமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கொரோனோ தொற்று ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக எந்த விதமான படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்த அஞ்சலி பாவ கதைகள் நிசப்தம் உள்ளிட்ட படைப்புகளில் நடித்து இருந்தார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி சில நாட்களுக்கு முன்பு பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை அஞ்சலி தற்காப்பு கலைகளை கற்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்காப்புக் கலைகள் பெண்களுக்கு மிகவும் அவசியமானது மற்றும் சினிமாவில் தற்காப்பு கலைகள் தெரிந்திருந்தால் ஆக்ஷன் வேடங்களில் சுலபமாக நடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்