கமல் ஹாசனுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர்!

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி என தொடங்கி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற நடிகர் சரத்குமார் தற்போது அக்கூட்டணியில் பேச்சவார்த்தை நடத்தப்படாததால் அதிலிருந்து வெளியேறி நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்துள்ளார்.

இதே போல அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஐஜேகே ரவி பாபா கமலுடன் இணைந்துள்ளாராம்.