மேடையில் தளபதி விஜய்யிடம் பள்ளி மாணவிகள் கேட்ட அதிரடி கேள்விகள்..!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யிடம் பள்ளி மாணவிகள் கேள்வி கேட்கும் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய்யிடம் ஒரு மாணவி உங்களின் மகன் ஜேசன் மற்றும் மகள் திவ்யா இருவரின் புகைப்படம் கூட வெளிவராமல் மறைத்து வருவதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விஜய் “அவர்களுக்கு எந்த ஒரு முக்கிய துவமும் கிடைக்காமல், அவர்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தான், அவர்களின் புகைப்படம் கூட வெளியாகாமல் உள்ளது” என கூறியுள்ளார்.