நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாக்டர்.
இப்படத்தின் டீஸர் கூட வெளியாகாத நிலையில், வெளியாகியிருந்த மூன்று பாடல்கள் பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகவிருந்த டாக்டர் திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிக்கையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், தமிழகத்தில் நடக்கவுள்ள தேர்தல் காரணத்தினால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும், படக்குழுவினர்களுடன் கலந்துரையாடி வெளியீடு குறித்த தேதி பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Doctor Your love & support kept us going thus far, requesting you to keep up the support a little bit longer! ❤️🤗@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @priyankaamohan pic.twitter.com/3QScbj8tnV
— KJR Studios (@kjr_studios) March 9, 2021