தமிழ் சினிமாவில் 90 களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் தான் நடிகை ரோஜா, செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.
இவர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.
மேலும் தமிழை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். பின் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதனிடையே திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை தவிர்த்து வரும் ரோஜா, ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா, அங்கிருந்த இளைஞசர்களுடன் மைதானத்தில் இறங்கி விளையாடியுள்ளார் ரோஜா. இதோ அந்த வீடியோ..
View this post on Instagram