பாண்டியன் ஸ்டோர் ஜீவாவின் மனைவி இவ்ளோ பெரிய ஆளா.?!

கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலும் நாடு முடங்கி இருந்தது .கொரோனா தோற்றால் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டனர். சிலர் உயிரிழக்கவும் செய்தனர். இந்நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே ஓய்வு எடுப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ரசிக்கப்பட்டது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் கதை பெருமளவு ரசிகர்களை பெற்றது. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை சித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர், நடிகை காவியா முல்லை கேரக்டரில் தற்போது நடித்து வருகின்றார். நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது அவர் சீரியலில் காட்டப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட வெங்கட், தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொரோனாவில் இருந்து மீண்டதாக தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது வெங்கட் தனது மனைவியுடன் சேர்ந்து அவர் நடனமாடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.