சுரேஷ் ரெய்னாவுடன் செல்பி வெளியிட்ட 96 ஜானு…!

தமிழ் சினிமாவில் 96 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌரி இவர் அந்த படத்தில் பள்ளிப்பருவ காட்சிகளில் ஜானுவாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை பெறுவார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் கௌரி நடித்திருந்தார். தற்போது சமீபத்தில் நடைபெற்ற ‘பிஹைன்வுட்ஸ் கோல்ட் ஐகான்’ விருது வழங்கும் விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடத சுரேஷ் ரெய்னா தற்போது சென்னையில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவும் இந்த விருது வழங்கும் விழாவிற்கு சென்றுள்ளார்.தற்போது சுரேஷ் ரெய்னாவுடன் கௌரி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.