தலைவி கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடையை அதிகரித்த நடிகை கங்கனா ரனாத்…

இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தலைவி. இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முக்கிய காரணமே மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை காண அவளோடு உள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக நடிகை கங்கனா ரனாத் பல சவால்களை மேற்கொண்டுள்ளார், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்காக அவர் 20 கிலோ எடையை அதிகரித்து, பின்னர் சில மாதங்களிலே பழைய வடிவத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் நாளை நடிகை கங்கனா ரனாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும் தற்போது நடிகை கங்கனா ரனாத் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தலைவி திரைப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

மேலும் இப்படத்தில் அவருடன் அரவிந்த் சாமி, மதுபாலா, பூர்ணா, மற்றும் சமுத்திரகனி ஆகியோரும் தலைவி படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.