இரண்டாவது முறையாக தல தளபதி இணையவிருந்த முக்கிய திரைப்படம்..!!

தல தளபதி இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் புரிந்தது, மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு தல நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

இதனிடையே தளபதி விஜய் அடுத்தாக தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நேருக்கு நேர்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சூர்யா, தனது முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இதனிடையே அப்படத்தில் முதலில் நடிகர் விஜய்க்கு எதிராக நடிக்கவிருந்ததே தல அஜித் தான், அப்படத்தின் ஒரு சில காட்சிகளில் நடித்த அஜித் பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகி கொண்டார்.