பேட்ட படத்தை அப்பட்டமாக காப்பியடித்த மாஸ்டர்..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவைத்தது, இதனால் மாஸ்டர் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து தினமும் எதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் மற்றும் பேட்ட திரைப்படத்தின் மொத்த காட்சிகளும் ஒரே மாதிரி இருப்பதை கண்டு பிடித்த ரசிகர்கள், புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

ஆம், இரண்டு திரைப்படங்களின் கதைகளும் வெவ்வேறாக இருந்தாலும், ஒரு சில அம்சங்கள் இரண்டு திரைப்படங்களிலும் ஒன்றாக தான் உள்ளது.

உதாரணமாக விஜய் சேதுபதி, மரண மாஸ் – வாத்தி கமிங், காட்சி அமைப்புகள், காலேஜ் கேங் உள்ளிட்ட விஷயங்கள். இதோ இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.