ஒருவரின் தூக்க அளவு அவரின் வயது , உடல் நிலை , பழக்கவழக்கங்கள், உட்கொள்ளும் உணவு அகியவற்றைக் கொண்டு மற்றவரிடமிருந்து மாறுபடுகிறது .
எப்படி இருந்தாலும் பொதுவாக குறைந்தது 7-8 மணி நேரம் தூக்க அவசியம். இது இல்லாவிடின் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றது.
தற்போது சரியான அளவு உறங்காமல் இருப்பதால் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- தூங்காமல் இருந்தால், கவனக் குறைவு, ஞாபக மறதி, உடல் சோர்வடைதல் அதே போல் கற்பதிலும் ஆர்வம் குறைந்து விடும். நீண்ட மற்றும் குறுகிய கால ஞாபக மறதி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- தூங்காமல் இருக்கும் போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழுகிறது. அதுவும் தூங்காமல் இருக்கும் ஒருவருக்கு குடிப்பழக்கம், உடல் பருமனும் கூடவே இருந்தால், அவர்களை இதய நோய்கள் சீக்கிரத்தில் தாக்கும்.
- நாம் தூங்கும்போதுதான் நம் உடலில் இயங்கும் எதிர்ப்பு செல்கள் சைட்டோகைன் என்ற புரோட்டினை வெளியிடுகிறது. இந்த சைட்டோகைனுடம் ஆன்டிபாடிஸ் களும் சேர்த்து நம் உடலுக்குள் வரும் கிருமிகளை எதிர்த்து போராடி அவற்றை வெளியேற்றுகிறது. நாம் சரியாக தூங்கவில்லையென்றால் , சைட்டோகைன் சுரக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் உருவாகக் காரணமாகிவிடும்.
- நாம் தொடர்ந்து தூங்காமல் இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படும். தேவையில்லாத கோபங்கள் , குழப்பங்கள் உருவாகி , மன அழுத்தம் ஏற்பட்டு அன்றாட வேலையை பாதிக்கச் செய்யும்.
- நன்றாக தூங்கினால் பசியும் மற்ற வளர்சிதை மாற்றங்களும் ஒழுங்காக நடைபெறும். இதனால் தேவையான கலோரிகள் எரிந்து உடலை இளைக்க வைக்கும். ஆனால் சரிவர தூங்காமல் இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். தூங்காமல் இருக்கும் போது க்ரெலின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது கலோரிகளை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் கூட்டும்.
- 6 மணி நேரத்திற்கும் குறைந்த தூக்கம் இருந்தாலோ அல்லது 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கினால் இன்சுலின் ஹார்மோனின் அளவு குறைந்து சர்க்கரை வியாதி வரும் ஆபத்து ஏற்படும்.
- சரிவர தூக்கம் இல்லாத போது நம் உடல் கார்சிடால் என்கின்ற ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்கிறது. இது முகத்தில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையை போக்கி ஒரு இறுக்கத்தை சருமத்திற்கு தருகிறது. இதுவே சுருக்கம், கண்களுக்கு கீழே மெல்லிய கோடுகள், கருவளையம் ஆகியவைகளைத் தரும். இதனால் சீக்கிரம் வயதான தோற்றத்தை கொடுக்கும்.
- தொடர்ந்து குறைவான தூக்கம் தூங்குபவர்களுக்கு ஆயுள் குறைவு.மற்றும் இதய சம்பந்தமான முக்கிய பிரச்சனைகளுக்கு தூக்கம் இல்லாததும் ஒரு காரணம். ஆகவே நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால் நன்றாக தூங்குங்கள்.
- நீங்கள் நன்றாக கவனித்தீர்களேயானால் சரிவர தூக்கம் இல்லாதவர்கள்தான் நிறைய விபத்துக்குள்ளாகிறார்கள். போதிய அளவு எச்சரிக்கைக் தன்மை குறைந்து விபத்தினை சந்திக்க நேரிடும்.
- தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு உடலுறவில் நட்டமில்லாமல் போய்விடும். அதே போல் ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைந்துவிடும்.