பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் சமயத்தில் சில புதிய சீரியல்களின் புரொமோக்கள் ஒளிபரப்பாகி வந்தன.

அதில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, ஆரம்பத்தில் சீரியலுக்கு எந்த வரவேற்பும் இல்லை, ஆனால் போக போக மக்களின் ஆதரவை பெற்றது இந்த சீரியல்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட சீரியல் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் அனைத்தும் தாங்களும் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதாகவும் அதனாலேயே இந்த சீரியல் பிடித்துபோக பார்ப்பதாகவும் கூறியிருந்தனர்.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கான TRPயும் அதிகமாகி வருகிறது.

ஏனெனில் மக்கள் எதிர்ப்பார்க்கும் திருப்பங்கள் சீரியலில் இடம்பெற்றுள்ளன. இந்த சீரியலில் ஒரு கடுப்பான குடும்ப தலைவராக நடிப்பவர் கோபி என்கிற சதீஷ்.

இவர் அண்மையில் இன்ஸ்டா பக்கம் வந்தார், அதில் இருந்து நிறைய படப்பிடிப்பு புகைப்படங்கள், தான் வாழ்க்கையில் செய்யும் விஷயங்கள் என பதிவுகளாக செய்து வருகிறார்.

அப்படி அண்மையில் அவரது மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அவரது பெயர் கீதா என்றும் மலையாள சினிமாவில் அவரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என பதிவு செய்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@sathish_artist05)