விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் இதற்கு முன் பிக்பாஸ் நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளரை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி மும்முறமாக களமிறங்கியுள்ளது.
பிக் பாஸ் 5 வது சீசனைத் தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல் தான் நிச்சயம் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் அவர் தனது சொந்த காசை செலவு செய்து வருவதால் அதை ஈடுகட்டும் பொருட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
View this post on Instagram
இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி புகழ் நடிகை சுனிதா கோகாய் இதில் கலந்து கொள்ள போவதாக கூறப்பட்டு வருகின்றது. அவர் மட்டும் கலந்து கொண்டால் நிகழ்சியில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது, தமிழை பேசுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அமர்களப்படுத்துவார் எனவே சுனிதா இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.