சக்ராக்கட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக உள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக இருந்த கே.பாக்யராஜின் மகனான சாந்தனு தற்போது வரை ஒரு மிக பெரிய வெற்றிக்காக காத்துகொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பாவ கதைகள் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. மேலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் சாந்தனு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில் சாந்தனுவிற்கு அவரின் ஆரம்பகாலத்திலே மிக நல்ல திரைப்படங்களின் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.
ஆனால் அப்படங்களை அவர் அல்லது அவரின் தந்தை கே.பாக்யராஜ் நிராகரித்ததாக கூறப்படுகிறது. ஆம், அப்படி அவர் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என்னென்ன என பாருங்கள்.
1. பாய்ஸ்
2. களவாணி
3. சுப்ரமணியபுரம்
4. காதல்