அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போல் மாறிய தொகுப்பாளினி டிடி ..!!

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக, தான் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் எடுத்து செல்பவர் திவ்யதர்ஷினி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் தனது இளம் வயதில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தொகுப்பாளினி டிடி, ‘ராதா’ எனும் போட்டோஷூட் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது போட்டோஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதில் பார்ப்பதற்கு, ஹிந்தியில் வெளியான ஜோதா அக்பர் படத்தில் வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே தெரிகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..