90களில் கலக்கிய பல கலைஞர்கள் இப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கின்றனர்.
அப்படி ஒரு பிரபலம் தான் தீபக். இவர் தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல திறமைகளை வெளிக்காட்டி வெற்றிக்கொடி நாட்டியவர்.
2006ம் ஆண்டு தென்றல் என்ற சீரியலில் நாயகனாக நடித்தார், அதன்பிறகு தீபக்கை சீரியல் பக்கம் காணவில்லை.
ஆனால் அவர் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், சில நிகழ்ச்சிகளை தயாரித்தும் உள்ளார்.
தற்போது தீபக் பல வருடங்களுக்கு பிறகு ஒரு விஷயம் செய்யவுள்ளார்.
அதாவது புதிதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் ரேகாவும் நடிக்கிறார்.