37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்? வெளியான காரணம்!

ஜெயம் படம் தமிழ் சினிமாவில் ரவிக்கு மட்டும் கைகொடுக்கவில்லை, அதில் நாயகியாக நடித்த சதாவிற்கும் பெரிய பிரபலத்தை கொடுத்தது.

அப்படத்திற்கு பிறகு சதா, விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

பின்னர் மார்க்கெட் குறையா சதா, வடிவேலுவின் எலி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது நடிப்பில் டார்ச்லைட் என்ற படம் வெளியாகி இருந்தது.

அப்படத்தின் பேட்டி ஒன்றில் நடிகை சதாவிடம் அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு நடிகை சதா, திருமணம் குறித்து இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. எனது வாழ்வில் எனக்கு ஏற்ற ஒரு நபரை நான் இதுவரை சந்தித்து இல்லை.

அப்படி ஒருவரை சந்தித்தால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.