தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தற்போது தளபதி 65 படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது. இதில், நடிகர் விஜயின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.