நீண்ட தாடி, மீசை என ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர்…..

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.

சமீபத்தில் கூட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அது உண்மையல்ல என நிரூபிக்கும் வகையில் சீரியல் தற்போது வரை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் இருதயம்.

இந்நிலையில் நடிகர் இருதயம் நீண்ட தாடி, மீசை என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகர் இருதயத்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ” நீங்க செம் மாஸா இருக்கீங்க ” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..