2 வயது குழந்தை கண்முன்னே தாய் பீர்பாட்டிலால் சரமாரி குத்திக்கொலை.. கணவன் வெறிச்செயல்.! வெளியான தகவல்

சென்னையில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வீட்டுவசதி வாரியகுடியிருப்பை சார்ந்தவர் ரவி (வயது 26). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புளியந்தோப்பு கந்தன்னிகாபுரம் பகுதியை சார்ந்த விஜயலட்சுமி (வயது 23) என்ற பெண்மணிக்கு இடையே கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த விஜயலட்சுமி, தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, ரவி தினமும் மது அருந்திவிட்டு மாமனாரின் இல்லத்திற்கு சென்று மனையிடம் தகராறு செய்து வந்துள்ளார். விஜயலட்சுமி நேற்று திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்த சூழ்நிலையில், வீட்டில் இருந்த மாமனார் வெங்கடேசனை ரவி கல்லால் அடித்துள்ளார்.

பின்னர், மனைவியை எப்படியோ சமாதானம் செய்த ரவி, மனைவி மற்றும் 2 வயது மகனை வியாசர்பாடிக்கு அழைத்துவந்துகொண்டு இருந்த நிலையில், எருக்கஞ்சேரி இரயில்வே சுரங்கப்பாதைக்கு அருகே வந்துள்ளனர்.

இதன்போது, இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்படவே, அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து குழந்தையின் கண்முன்னே மனைவியின் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த பொதுமக்கள், வியாசர்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.