தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பெரும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், விசுவாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை அனிகா.
நடிகை அனிகா அவர்கள் 2010ம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர்.
பின்பு அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
மலையாள படங்களில் தனது நடிப்பினை கலக்கி வரும் அனிகா மீண்டும் அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார். ஆம் விசுவாசம் படத்தில் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார்.
நயன்தாராவைப் போன்று தோற்றத்தில் காணப்படும் அனிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்…
அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனிகா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், இதுபோலவே பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லையான காவ்யாவும் தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக தனது நடிப்பில் அசத்திவருகின்றார்.
இந்நிலையில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷுட் சமீபத்தில் அனிகா எடுத்தது போன்று எடுத்து வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் பல கிண்டலான கருத்துக்களையும், கேலியும் செய்து வருகின்றனர்.