ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியா வீரர் ஹசல்வுட் திடீரென்று விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் கிடைக்காமல் சென்னை அணி நிர்வாகம் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு வரும் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஒரு சில அணிகளில் இருந்து வீரர்கள் விலகி வருகின்றனர்.
காயம் காரணமாக ஹைதராபாத் அணியில் இருந்து அவுஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் விலகினார். அதைத் தொடர்ந்து தற்போது சென்னை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட் தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக விலகியுள்ளார்.
மிட்செல் மார்ஷ் விலகியவுடன், ஹைதராபாத் அணி உடனடியாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை எடுத்துவிட்டது.
ஹசல்வுட்டிற்கு பதிலாக அவுஸ்திரேலியா அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் மற்றும் இங்கிலாந்தின் ரீசி டாப்லே போன்ற வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுகிய போதிலும் இருவரும் சென்னை அணியின் கோரிக்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.