அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்

நாட்டில் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக, கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 54 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ,578 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 25 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 19 பேரும், களுத்துறையில் 12 பேரும் தொற்றுக்குள்ளான அதேநேரம் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், மொனராகலையிலும், கேகாலையிலும் தலா 3 பேருக்கும், முல்லைத்தீவு மற்றும் காலி மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் தொற்றுறுதியானது.

வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருக்கும் தொற்றுறுதியானதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.