அஜித்தின் விஸ்வாசம் படம் இதுவரை செய்த சாதனைகள் என்னென்ன??

இயக்குனர் சிவா தனது சினிமா பயணத்தை தொடர்ந்த கொஞ்ச நாளிலேயே அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

அவரை வைத்து இதுவரை வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கிவிட்டார்.

அடுத்தடுத்தும் இவர்கள் இணைவார்களோ என்று பார்த்தால் அஜித், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே வலிமை படத்தில் நடிக்கிறார்.

சிவா அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்ணாத்த என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

அஜித்-சிவா இணைந்து வெளியிட்ட படங்களில் செம மெகா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் விஸ்வாசம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

படத்தின் கதையை தாண்டி பாடல்கள் செம ஹிட். அண்மையில் இப்படத்திற்காக டி.இமான் அவர்களுக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.

இதனால் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் குழுவினர் செம குஷியில் உள்ளனர். இந்த நிலையில் தான் விஸ்வாசம் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னென்ன நடந்தது என்று ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த மாஸான வீடியோ உங்கள் பார்வைக்கு,