சைக்கிளில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்கு இது தான் காரணமா?

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் தங்களின் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி,கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் சைக்கிளில் வந்த காரணம் அவர் வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி இருந்ததாலும், அங்கு சின்ன சந்து என்பதால் காரை நிறுத்த முடியாது என்பது மட்டுமே காரணம். மேலும் இதில் வேறு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.