நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு சிறைத்தண்டனை வழக்கில் திடீர் திருப்பம்.!

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனம் தயாரித்த ‘இது என்ன மயக்கம்’ என்ற திரைப்படத்திற்காக, ‘ரேடியன்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

மேலும், சொத்துக்களை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சரத்குமார், ராதிகா வாங்கிய கடனுக்கு அளித்த செக் மற்றும் அடமானம் வைத்த சொத்துக்கள் முறையாக இல்லை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எம்எல்ஏ., எம்பி.,க்கள் வழக்குகளை விசாரணை செய்யும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ‘ரேடியன்ஸ்’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள், ‘நடிகர் சரத்குமார், ராதிகா ஓராண்டு சிறை தண்டனை விதித்து’ உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தங்கள் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா அவசரமாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள். அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.