முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றது.
ஆனால் இந்த முட்டைக்கோஸை தினமும் தங்களின் உணவில் சேர்த்து சாப்பிடுவதால், சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
முட்டைக்கோஸை நாம் தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவுகளின் செரிமானத் தன்மையை குறைத்து, வயிற்றில் அதிகமான வாயுக்களின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இதனால் அதிகமான ஏப்பம், வயிற்றுவலி, வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
முட்டைக்கோஸில் உள்ள அதன் உணவு இழைகளை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களுக்கு கடுமையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.
நம்முடைய உடம்பில் அயோடின் குறைபாடுகள் உள்ளவர்கள் முட்டைக்கோஸை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் முட்டைக்கோஸானது நம் உடம்பில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, பல பிரச்சனையை உண்டாக்குகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக முட்டைக்கோஸ் இருந்தாலும், இது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும் நோயாளிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே முட்டைக்கோஸ் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களின் உணவில் முட்டைக்கோஸை அதிகமாக சேர்த்துக் கொண்டால், தாய்பாலின் சுரப்புகள் குறைந்து மார்பகத்தில் வலியை ஏற்படுத்தும்.