விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகள் எப்படி பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 500 எபிசோடை கடந்துவிட்டது.
இந்த சீரியலில் நடிகர்களின் மாற்றம் எதுவும் நடக்கவில்லை, சித்ரா மறைவிற்கு பின்னால் முல்லை வேடத்திற்கு மட்டும் காவ்யா என்கிற நடிகை நடிக்க வந்தார்.
மற்றபடி எந்த மாற்றமும் இல்லை, வெற்றிகரமாக ஓடுகிறது. இன்னும் சில நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் வரப்போகின்றன.