தற்போது இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை அனுபவித்து வருகிறது. இது நிச்சயம் நல்ல செய்தி அல்ல. கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் இந்தியாவில் 96,517 புதிய தொற்றுநோய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளின் 1 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை விட சற்று குறைவு தான். தற்போது இந்தியாவில் செயலில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 12,684,477- ஐ எட்டியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கோவிட்-19 இன் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய உயர் மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் நாட்டில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்ததன் பின்னணியில் உள்ள மூன்று முக்கிய காரணங்களை மையம் தெளிவாக குறிப்பிட்டது.
நாட்டில் செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் ஆபத்தான வளர்ச்சிக்கு 10 இந்திய மாநிலங்கள் பெருமளவில் பங்களிப்பதாக இந்த கூட்டத்தின் போது மையம் தெரிவித்தது. இந்தியாவில் கோவிட்-19 மீண்டும் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் மக்களின் அலட்சியம் மற்றும் தொற்று விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது என்று மையம் கூறியது.
மாஸ்க்குகளை பயன்படுத்தாமல் இருப்பது
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வழக்குகளின் உயர்வுக்கு முக்கிய காரணம், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் உள்ள கடுமையான சரிவு இருக்கலாம் என்று கூட்டத்தில் மையம் கூறியது. முன்னதாக, நிபுணர்கள் மாஸ்க்குகளை சரியாக அணிவது கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் படியாகும் என்று கூறியிருந்தனர்.
கொரோனா வைரஸைத் தடுக்க உதவும் மாஸ்க்கை அணிவதற்கான சரியான வழி என்ன?
மாஸ்க்கை சரியான வழியில் அணிவது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உலக சுகாதார அமைப்பின் சுருக்கமான வழிகாட்டுதல்களின் படி, மாஸ்க்கை போடுவதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மாஸ்க்கை கழற்றுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். டபுள் லேயர் மாஸ்க்கை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். மாஸ்க் அணியும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், நீங்கள் அணியும் மாஸ்க் உங்கள் மூக்கு, வாய் மற்றும் தாடை பகுதியை மறைத்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியைப் பராமரிக்காதது
மேலும் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மிகவும் முக்கியமான நடவடிக்கையை மக்கள் பின்பற்றுவதில்லை என்றும் மையம் கூறியது. இருமல் அல்லது தும்மும் எவரிடம் இருந்தும் பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும், ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும். அதோடு கூட்டத்தைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கூட்டமான பகுதியில் இருக்க வேண்டியிருந்தால், மிகவும் விழிப்புடன் தொற்று நெறிமுறைகளைப் பராமரிக்க வேண்டும்.
பூங்கா பகுதியில் அல்லது உடற்பயிற்சியின் போது சமூக இடைவெளியைப் பராமரிப்பது எவ்வாறு?
கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையில் திடீர் எழுச்சி உள்ளதால், தற்போது முடிந்தவரை பூங்கா பகுதிக்கு செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஏனெனில் இருமல் அல்லது தும்மல் உள்ளவர்களின் நீர்த்துளிகள் தான் கொரோனாவை பரப்புகிறது.
பின்பற்ற வேண்டியவை
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நடக்கும் போது ஒருவருக்குகொருவர் குறைந்தது 4-5 மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஓட்ட பயிற்சி மற்றும் பைக்கில் செல்லும் போது, ஒருவருக்குகொருவர் குறைந்தது பத்து மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். வேகமாக பைக்கில் செல்லும் போது 20 மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சம் கொரோனா வழக்கு
இதுவரையான கொரோனா வழக்குகளிலேயே அதிகபட்சமாக சமீபத்தில் 1.03 லட்சம் புதிய COVID-19 வழக்குகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் மோசமான செய்தி.
கொரோனா வைரஸ் எழுச்சிக்கு மத்தியில் மாநிலங்களின் புதிய விதிகள்
இந்தியாவில் இதுவரை ஒரு நாளில் அதிகபட்சமாக 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் ஏற்பட்டதால், இந்திய அளவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1,25,89,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 478 தினசரி புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,65,101 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக புதிய தடைகளை விதித்ததைத் தவிர, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கோவிட் -19 நிலைமை மேலும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.