குஷ்பு கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசியல்வாதிகளுக்கும் திரை உலக பிரபலங்களுக்கும் அவ்வப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி குஷ்புவின் கணவரும் இயக்குனருமான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
தனது கணவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அவர் கணவர் சுந்தர் சி தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.