கர்ணன் வெளியீடு… 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி – தியேட்டர்களுக்கு அபராதம்!

கர்ணன் திரையிட்ட அடுத்த நாளே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இரண்டாம் நாளான ஏப்ரல் 10 ல் இருந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டதால் பல திரையரங்குகளில் வசூல் குறைந்தது. ஆனாலும் புறநகர் பகுதிகளில் இந்த விதிமுறையைக் கடைபிடிக்காமல் முழு கொள்ளளவுக்கும் தியேட்டர் விற்பனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டையில் சில திரையரங்குகளை சோதனையிட்ட அதிகாரிகள் 5000 ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.