நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்று மாத்திரம் தங்க நகைகள் அபகரிப்பு கொள்ளைச் சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு, ராகம, அவிசாவளை, திஸ்ஸமஹாராம, ஜாஎல ஆகிய பிரதேசங்களிலேயே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மோட்டார் சைக்களில் வருகைத் தந்தே நகைகளை அபகரிப்பதாகவும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், எனவே வர்த்தக நிலையங்கள், வீதிகளில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.