இரண்டு மாஸ்க் அணிவது நன்மையா?

நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருப்பதற்கே மாஸ்க் அணிகின்றோம்.

பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு (சர்ஜிக்கல் மாஸ்க்)களை பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் பலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி இரட்டை மாஸ்க் அணிவது ஏன்? அவ்வாறு அணிவது அவசியமா? என்பது குறித்து நிபுணர்கள் கூறியதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்க வேண்டும் என்பதற்கே.

ஆனால் முககவசம் அணியும் போது சிலருக்கு சரியாக பொருந்தாமல் இருப்பதால், அதற்கேற்ப துணி மாஸ்க்கை அணிவதோடு, இறுக்கமாக காது அருகில் முடிச்சு போட்டும் கொள்கின்றனர்.

மேலும் முககவசம் அணிந்து இருக்கும் போது மூக்கின் மேல் பகுதி வழியாக காற்று உள்ளே வருகிறதா? வாயின் அடிப்பகுதியில் தாடை பகுதி வழியாக காற்று உள்ளே வருகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அதன் வழியாக வைரஸ் உள்ளே வர வாய்ப்பு உண்டு. இந்த முககவசத்துக்கு பதில் என்-95, கே.என்-95 ஆகிய முககவசங்களை அணிந்தால் இறுக்கமாக, பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.