மீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனா தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதில் அதிகள நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

அதன்படி கொழும்பில் 51 பேருக்கும் தாயகம் திரும்பிய 41 பேருக்கும் குருநாகலில் 33 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 24 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் 22 கம்பஹாவில் 10 பேருக்கும் மாத்தளையில் 9 பேருக்கும் கேகாலையில் 8 பேருக்கும் மட்டக்களப்பில் 6 பேருக்கும் நுவரெலியா மற்றும் கண்டியில் தலா 3 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை காலி, மாத்தறை, புத்தளம், அனுராதபுரம், மொனராகலை மற்றும் திருகோணமலையில் தலா இருவருக்கும் களுத்துறை, இரத்தினபுரி, மன்னர் மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.