வாலிபர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கொரோனாவுக்கு பலி

வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் அப்புத்துரை வேலுப்பிள்ளை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தனது 109வது வயதில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகிய அவர் நேற்று கொழும்பில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து வாலிபர் சங்கம் வட்டுக்கோட்டை, மற்றும் இந்து வாலிபர் சங்கம் கொழும்பு கிளை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இவர் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வந்தவர் ஆவார்.

இதேவேளை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தனது காணியினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கதிற்கு நன்கொடையாக இவர் வழங்கியுள்ளார்.

வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட அப்புத்துரை வேலுப்பிள்ளை அவர்கள் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.